பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம்: குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு!

கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் இருவரை கைது செய்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் இருவரை கைது செய்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (35). இவர் பொள்ளாச்சியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக உள்ளார். கடந்த 15ம் தேதி மகாலட்சுமி, தனது இரு சக்கர வாகனத்தில், தாமரை குளத்தில் இருந்து பட்டணம் கிராமத்திற்கு சென்ற போது, அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், மகாலட்சுமி கழுத்தில் இருந்து 3 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து, மகாலட்சுமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்த நிலையில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மகாலட்சுமியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. இருவரில் ஒருவர், கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (18), இவர் கோவைப்புதூரில் உள்ள கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருபவர், மற்றொருவர் டிரைவர் நாகார்ஜுனன் (25), என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 பவுன் நகையை மீட்டனர். மேலும், செயின் பறிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்த நிலையில், இவ்வழக்கில் துரித நடவடிக்கை மூலம் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை பாராட்டி கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...