திருப்பூர் அரசு பள்ளி மாணவி ஜே.இ.இ. தேர்வில் வெற்றி; ஐ.ஐ.டி. யில் சேர விருப்பம்

திருப்பூர்: ஜே.இ.இ., தேர்வில் திருப்பூரை சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார்.


திருப்பூர்: ஜே.இ.இ., தேர்வில் திருப்பூரை சேர்ந்த, அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்று, அசத்தியுள்ளார்.

என்.ஐ.டி., ஐ.ஐ.டி., யில், பொறியியல் படிப் பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, கடந்த முதல் தேதி நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதன் மூலம், திருப்பூர் மாவட்ட அளவில், அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவி என்ற பெருமையை, சவுந்தர்யா,

பெற்றுள்ளார்.

இவரது தாய், சரஸ்வதி மற்றும் ஆசாரி வேலை செய்து வரும், தந்தை வெள்ளிங்கிரி, மகளின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு வெற்றி குறித்து சவுதர்யா கூறுகையில்: தேர்வுக்கு மனப்பாடம் எதுவும் செய்யாமல் கருத்தை மட்டும் உள்வாங்கி படித்ததாகவும், மேலும் இத்தேர்வுக்காக தனிப்பயிற்சி மையங்களை அணுகவில்லை என தெரிவித்தார்.

"வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் பிளஸ் 2 வில், 427 மதிப்பெண் பெற்றேன். ஐ.ஐ.டி., யில் சேர்ந்து மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்", என்றார் சௌந்தர்யா.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...