ஊட்டசத்து மாதம்: கோவையில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைப்பு

கோவை: நாடு முழுவதும் இம்மாதம் ஊட்டசத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.


கோவை: நாடு முழுவதும் இம்மாதம் ஊட்டசத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் வீடுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர் மீனாட்சி கூறும் போது, வீடுகளில் சமுதாய வீட்டு தோட்டம் அமைப்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஊட்டசத்து மிகுந்த காய்கறிகள் சத்து கெடாமல் கிடைக்கிறது.

குறிப்பாக, காய்கறிகளில் உள்ள நுண் ஊட்டசத்துகள் முழுமையாக கிடைக்கிறது. வீட்டு தோட்டம் அமைத்தால் சத்து மிகுந்த காய்கறிகள் கிடைப்பதுடன், உடல் உழைப்பும் அதிகரிக்கிறது. இதனால், மன அழுத்தம் குறைகிறது. வீட்டு தோட்டத்தினால், நமது பாரம்பரிய பழக்கத்தை வருங்கால தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியும்.



கீரைகளில் இரும்பு சத்து உள்ளதால் அனைத்து பயனாளிகளின் வீடுகளிலும் மலை கீரைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீனாட்சி கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...