கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள்: அணுகு சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தகவல்

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் அணுகு சாலைகளை விரிவுப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.



கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் அணுகு சாலைகளை விரிவுப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் 6000 மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.



இதனிடையே, மேம்பால பணிகள் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இதனால், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, ஏதுவாக போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் தொய்வு இல்லாமல் நடக்க அப்பகுதியில் உள்ள அணுகு சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் ஒரளவு கட்டுப்படுத்தப்படும். மேலும், அவ்வழியாக கனரக வாகனங்களை தவிர்த்து ஆம்புலன்ஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்க அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...