கோவை: கோவை, பன்னிமடை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

கோவையை ஒட்டியுள்ள, ஆனைக்கட்டி,மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட இடங்களில் 100 மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றனர்.அவை, அடிக்கடி நீர் மற்றும் உணவு தேவைக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று, அதிகாலை 4 மணிக்கு பன்னிமடை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி லீலாவதி, அருகில் இருந்த கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சுற்றி கொண்டிருந்த ஒற்றை யானை மூதாட்டியை பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையும், காவல் துறையும் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பன்னிமடை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொது மக்களுக்கு அச்சுறுத்தி வருகின்றன, என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, மூதாட்டியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.