கோவையில் கூலித்தொழிலாளியை போலீசார் தாக்கிய விவகாரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவை: கோவையில் கூலித் தொழிலாளியை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கோவை: கோவையில் கூலித் தொழிலாளியை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது சகோதரர் வேல் முருகன் என்பவரது வீட்டில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருபவர் கண்ணன். இவரை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கடந்த 10ம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கண்ணனின் உறவினரான ராதாகிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கிய பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கண்ணனுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் கூறுகையில், 6 மாதங்களுக்கு முன்பு கோவனூர் என்ற பகுதியில் நடந்த கொலை ஒன்றை ஒப்புக்கொள்ள கூறி காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.

இதனிடையே, பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கையில், கோவனூர் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க கண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், காவல்நிலையத்திற்கு அழைத்து வரும்போதே அவரது கால்களில் அடிப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க கூறி மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...