கோவை போத்தனூர் காவல் நிலைய தலைமை காவலருக்கு கொரோனா தொற்று

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்த நிலையில், மாநில சுகாதார ஆணைய அறிக்கையின்படி தினமும் 400கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்த நிலையில், மாநில சுகாதார ஆணைய அறிக்கையின்படி தினமும் 400கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில், பல காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், பணிக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், வெள்ளலூர் பகுதியில் உள்ள போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலருக்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்.

பரிசோதனையின் அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை, தொடர்ந்து அவர் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். போத்தனூர் காவல் நிலையத்தில், இதுவரை 8ற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீப நாட்களில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு தொற்று குறைந்து வந்த நிலையில், போத்தனூர் காவல் நிலைய தலைமை காவலருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது, காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

காவலர்கள், பாதுகாப்புடன் பணிபுரியுமாறு, மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தி அவர்களுக்கு, முகாகவசம், கையுறை, கண்ணாடி,கபசுர குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். 

வரும் நாட்களில், தமிழகத்தில் கோவை உட்பட ஐந்து மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...