Exclusive: கோவையில் இருந்து வரும் 21ம் தேதி முதல் பெங்களூர், மைசூருக்கு பேருந்து சேவைகள் இயக்க அதிக வாய்ப்பு - கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

Exclusive: கோவையில் இருந்து வரும் 21ம் தேதி முதல் பெங்களூர், மைசூருக்கு பேருந்து சேவைகள் இயக்க அதிக வாய்ப்பு - கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

கோவை: கோவையிலிருந்து பெங்களூர், மைசூருக்கு வரும் 21ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது, என கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

ஊரடங்குக்கு முன் கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, அனைத்து நாட்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே, தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. விரைவில் மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கோவையில் உள்ள கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் மூலம்செல்ல அனுமதிக்கப்படும் போது, கோவையில் இருந்து மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 21ம் தேதி முதல் வெளி மாநில பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி, அனுமதிக்கப்பட்டால் முதல் கட்டமாக 50 சதவீத பேருந்துகள் கர்நாடக போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும். அறிவிப்பு வந்தவுடன் முன் பதவிற்கான வேலைகள் துவங்கப்படும்," என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...