கோவையில் ரூ.1,157 கோடி மதிப்பீட்டில் 48 மாதங்களுக்குள் அவிநாசி சாலை மேம்பால பணிகளை கட்டி முடிக்க உத்தரவு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பால பணிகளை 48 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பால பணிகளை 48 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நெரிசல் நிறைந்த சாலையாக விளங்கும் அவிநாசி சாலையில் தினமும் லட்சக்கணக்கான இருசக்கரம் மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது

இந்நிலையில், வாகனங்கள் விரைவாகச் செல்ல வசதியாக கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் துவங்கி கோல்ட்வின்ஸ் வரை ரூ.1,157 கோடியில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழி மேம்பாலம் கட்டப்படுகிறது.

அவிநாசி நோக்கி செல்லும் வழியில் இரு ஏறுதளம், அதேபோல் அவிநாசி பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில், இரு ஏறு தளம் இரு இயங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதன்படி, கோவையிலிருந்து அவனாசி நோக்கிச் செல்லக்கூடியவர்கள் அண்ணா சிலை அருகே ஜிடி நாயுடு அருங்காட்சியகம் எதிரிலும், நவ இந்தியா அருகிலும் பாலத்தில் ஏறும் வகையில் ஏறு தளங்கள் மற்றும் ஹோப்காலேஜ் அருகிலும் சித்ராவுக்கு முன்னதாகவும் இறங்கும் வகையில் இறங்கும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பாலம் கோல்ட்வின்ஸ் பகுதியில் முடிவடைகிறது.

இதேபோல, அவனாசி பகுதியில் இருந்து வருவோர் கோல்ட்வின்ஸ் பகுதியில் பாலத்தில் ஏறவேண்டும். அரவிந்த் கண் மருத்துவமனை எதிர் பகுதியிலும் ஹோப் காலேஜ் பகுதியிலும் பாலத்தில் ஏறும் வகையில் ஏறுதளங்கள் அமைய உள்ளன. நவ இந்தியா சிக்னலுக்கு 100 மீட்டர் முன்னதாகவும் அண்ணா சிலை சந்திப்புக்கு முன்னதாக பழமுதிர் நிலையம் அருகிலும் அமைக்கப்படும் இறங்கு தளங்களில் இறங்கிக் கொள்ளலாம்.

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் துவங்கி கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தூரத்திற்கு அமையவிருக்கும் நான்கு வழி மேம்பால கட்டுமான பணிகள் 48 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...