கோவையில் நள்ளிரவில் தொடரும் கார் ரேசிங்: ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது கார் மோதி நொறுங்கியது

கோவை: சென்னை பெருநகரத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரேசிங் செய்பவர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.


கோவை: சென்னை போன்ற பெருநகரத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு, இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரேசிங்கில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த ரேசிங் கலாச்சாரம் கோவையில் அதிகரித்து வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நள்ளிரவு கார் ரேசிங் குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், நேற்று கோவை சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே வசித்து வரும் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ மீது ரேசிங் கார் மோதியதில், ஆட்டோவின் முன்புறம் முற்றிலுமாக நொறுங்கியது.



இந்த நள்ளிரவு கார் ரேசிங் குறித்து திடர் புகார்கள் எழுந்துள்ள நிலையில், நேற்று சாய்பாபா காலனி, பி.எஸ். என்.எல் பகுதியில் வசித்து வரும் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ மீது கார் ரேசிங் செய்த இளைஞர்கள் அவரது ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவின் முன்புறம் முற்றிலுமாக நொறுங்கியது.

இது குறித்து ஆட்டோவின் உரிமையாளர் லோகநாதன் கூறும்போது, தனக்கு சொந்தமான ஆட்டோவை அருகில் வசிக்கும் கிங்ஸ்டன் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வருவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், நேற்று இரவு வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கார் ரேசிங்கில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆட்டோ மீது மோதியதில் வாகனம் சேதமடைந்ததாக தெரிவித்தார்.



மேலும், அவர் கூறுகையில், மது போதயில் கார் ஓட்டி வந்த நான்கு- ஐந்து இளைஞர்கள் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக இரண்டாவது நுழைவாயின் கதவில் மோதியதோடு, எதிர்புற சாலையில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதி உள்ளனர்.

இதுவே, டிரான்ஸ்பாமர் மீது மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்த, அவர், சமீப காலமாக இப்பகுதிகளில் இவ்வாறு இளைஞர்கள் ரேசிங்கில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டினார்.



இப்பகுதியில், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதனை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்தியவர்களை விரைந்து கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார் அப்பகுதி மக்கள். இது குறித்து வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

"இப்படி, கார் ரேசிங்கில் ஈடுபடும் இளைஞர்களால், உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உருவாகியுள்ளது மேலும், இவர்களால் தெரு ஓரங்களில் இரவில் உறங்கும் ஆதரவற்றோருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பிறருக்கு ஆபத்து விளைவிக்கும், இது போன்ற விபரீத ரேசிங்கில் ஈடுபடும் இளைஞர்களை பாரபட்சம் பார்க்காமல், தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நடைபெறுவதை படிப்படியாக குறைக்க முடியும்", என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...