தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை கரும்புகடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை கரும்புகடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மத்தியில் ஆளும் பாஜக அரசானது கல்வியில் காவியை புகுத்தி மாணவர்களின் கல்வி கனவை கேள்வி குறியாக்கும் வகையில் குலக் கல்வியை புகுத்தும் வகையிலும் வரையறை செய்யப்பட்டு கொண்டுவந்துள்ள இந்த தேசிய கல்விக்கொள்கையை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

அதேபோல, இந்த தேசிய கல்வி கொள்கை மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் எனவும் இந்த தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்வதாகவும் அதன் ஒரு பகுதியாக, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அப்போது தெரிவித்தனர்.

மேலும், சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசானது கல்வியில் காவியை புகுத்தும் வேலையை கைவிட வேண்டும், தேசிய கல்வி கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...