கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் தனது கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் பணிக்கு செல்லும் காரணத்தால் தன் குழந்தையை பார்த்து கொள்ள வீட்டின் அருகில் வசிக்கும் தேவி என்ற பெண்மணியை வேலைக்கு அமர்த்தி அவருக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி குழந்தையை கவனித்துக் கொள்ளும் தேவி வெளியூர் சென்று உள்ளார். வழக்கம் போல் குழந்தையை தேவியின் வீட்டில் விட்டு பணிக்கு சென்றுள்ளார். பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அந்த பெண் தேவியின் வீட்டில் இருந்து குழந்தையை பெற்ற போது, குழந்தையின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்தது.

மேலும், கண்கள் வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தை இருந்ததால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தேவியின் வீட்டில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும் தேவியின் கணவர் மற்றும் அவரது மகள் வீட்டிலிருந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், தேவியின் கணவர் ராமுவின் நண்பர் சக்திவேல் என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து, சக்திவேலை கைது செய்த போலீசார், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபகாலமாக குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...