கோவையில் பூர்விக நிலத்தை மீட்க அறவழியில் போராடி வரும் கல்லார் காடர் இன மக்கள்..!

கோவை: எது சுதந்திரம்? பூர்வ குடிகளான மலைவாழ் மக்களிடமிருந்து நிலத்தையும், உரிமைகளை பறிப்பதா? என்று காடர் இன மக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கோவை: எது சுதந்திரம்? பூர்வ குடிகளான மலைவாழ் மக்களிடமிருந்து நிலத்தையும், உரிமைகளை பறிப்பதா? என்று காடர் இன மக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர். 



ஆங்கிலேய அரசு மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வருவதற்கு முன்னர் இருந்து முழு வனத்தில் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருபவர்கள் ஆனைமலையில் தொடரில் வாழும் காடர், முதுவர், மலைமலசர், புலையர், ஏரவாளர் பழங்குடிகள் ஆவர்.

கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பெருமழையால் கல்லார் பழங்குடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த கிராமமே அழிவை சந்தித்தது. இதனை அறிந்த வருவாய் துறையும், வனத்துறையும் மாற்று இடமான தாய்மடி எஸ்டேட் பகுதியில் தற்காலிகமாக இடம் கொடுத்தனர்.

அந்த பகுதியில் அவர்களுக்கு எவ்வித உரிமைகளின்றி, வசதியும் இன்றி கடும் அவதிப்பட்டு வந்துள்ளனர். அதனால் அவர்களின் பூர்விக இடமான கல்லார் பகுதியையும், விவசாயம் செய்ய தெப்பக்குள மேடு வனத்தையும் தரக்கோரி பல முறை மாவட்ட ஆட்சி தலைவர், வால்பாறை வட்டாட்சியர், வருவாய் துறை போன்றோர்க்கு மனுக்கள் அளித்துள்ளனர். 

இருந்த போதிலும் வனத்துறையின் மெத்தன போக்கினாலும், அதிகாரத்தாலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர்களை கண்டித்து அறவழியில் தாய்மடி பகுதியில் இருந்து மானாம்பள்ளி வனச்சரகம் வரை சென்று முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது பற்றி அந்த ஊரை சேர்ந்த சிலரிடம் பேசுகையில், பூர்வகுடிகள் ஆன எங்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளும், சட்ட பாதுகாப்பும் எங்களின் பலம். ஆனால் இங்குள்ள வனத்துறையின் கீழ் செயல்படும் ஆனைமலை புலிகள் சரணாலயத்தினால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எங்களின் கலாச்சாரம், பயன்பாடு, மொழி, நாகரீகம் வளர்ச்சி ஆகியவற்றை அழித்து அடிமைகள் போல் நடத்துகிறார்கள். 

அடிக்கடி சோதனை என்ற பேரில் நிறைய சிரமங்கள் அனுபவித்து வருகிறோம். கடந்த வருடம் பெய்த பெருத்த மழையால் நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளை சந்தித்து இருக்கிறது. எங்களை மாற்று இடத்திற்கு மாற்றிய வனத்துறை இதுவரை பாரம்பரிய இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் அரசியல் கட்சிகள், பழங்குடி சார்ந்த இயக்கங்கள் என அனைவரும் ஒத்துழைப்பும், ஆதரவையும் நல்கி வரும் வேளையில் வனத்துறை மட்டும் முரண்பட்டு நிற்கிறார்கள். வன உரிமை சட்டம் 2016ம் ஆண்டின் படி கிராம சபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி இருந்தோம். அதனை பரிசீலிக்காமல் ஆனைமலை புலிகள் திட்ட துணை இயக்குனர் நிராகரித்து வருகிறார்.

ஒரு வருடமாக தாய்மடி எஸ்டேட் பகுதியில் எவ்வித வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். எங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. எங்கள் நிலம் எங்கள் உரிமை அல்லவா? ஆகவே கல்லார் குடியிருப்பு பகுதியை சீர் செய்து விவசாயம் செய்ய தெப்பக்குள மேடு வனத்தையும் வனத்துறை வழங்க வேண்டும். இதுவே கோரிக்கை என்கின்றனர் அப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்.

முழு சுதந்திரம் அடைந்த விட்டதாக 74ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்டால் இன்னும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள எத்தனையோ பழங்குடி மக்கள் அவர்களின் பூர்விக நிலத்திற்காகவும், உரிமைக்காகவும் வனத்துறையிடமும், அரசாங்கத்திடமும் தினம் தினம் போராடி வருவதே இன்றைய நிதர்சனம்..!

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...