கோவை: ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சியில் ஓய்வுபெற்றோர் போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளது. இதனை, உடனடியாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால், இன்று ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன் கூடிய, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள், "மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 2015 நவம்பர் முதல் 58 மாத கால அகவிலைப்படி உயர்வுடன் நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நல நிதியாக ரூ,50 ஆயிரம் அவர்களது குடும்பத்திற்கு வழங்க வேண்டும்."
மேலும், 2013 ஆம் ஆண்டு ஒப்பந்த சம்பள உயர்வு நிலுவை 40 சதவிகிதம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்தனர்.