74-வது சுதந்திர தினத்தையொட்டி கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்க வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையர் கொடியேற்றி வைத்து மரியாதை!

கோவை: 74-வது சுதந்திர தினத்தையொட்டி கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்க வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தேசியக்‌ கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கோவை: 74-வது சுதந்திர தினத்தையொட்டி கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்க வளாகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தேசியக்‌ கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 



முன்னதாக, கோவை மாநகராட்சி வளாகத்தில்‌ அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின்‌ திருவுருவச்‌ சிலைக்கு மலர்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



பின்னர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பேசும்போது தெரிவித்ததாவது:-



கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றினை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சியின்‌ அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ முழு பங்களிப்போடு இரவு, பகல்‌ பாராது அயராது பணியாற்றியதன்‌ பயனாக இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவ்களின்‌ எண்ணிக்கை குறைந்துள்ளது. 

மற்ற மாவட்டங்களை ஓப்பிடும்போது கோவை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு உயிரிழப்புகளை தடுத்துள்ளது. தற்சமயம்‌ பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 



இதனால்‌ அனைத்து விதமான கடைகள்‌, வணிக வளாகங்கள்‌, கோவில்கள்‌ போன்றவை திறக்கப்பட்டுள்ளதால்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து வெளியே செல்ல வேண்டும்‌, போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌. மேலும்‌, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌, சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற அறிகுறி உள்ளவர்கள்‌, இரத்த அழுத்தம்‌, சர்க்கரை வியாதி, சிறுநீரக பிரச்சனை, இருதய நோய்‌ உள்ளவர்கள்‌ கட்டாயம்‌ மருத்துவ பரிசோதனைகள்‌ செய்திட வேண்டும்‌. மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும்‌ தினசரி மருத்துவ முகாம்கள்‌ நடைபெற்று வருவதை பொதுமக்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. 

கோவை மாநகராட்சி ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தில்‌ தமிழக அளவில்‌ தொடர்ந்து முதலிடம்‌ பெற்றுள்ளது. இந்திய அளவில்‌ 5வது இடத்தில்‌ உள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்திலும்‌ தொடர்ந்து இரவு, பகல்‌ முழுவீச்சில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும்‌ காலங்களில்‌ நாம்‌ அனைவரும்‌ இணைந்து பணியாற்றி நமது கோவை மாநகராட்சி நிர்வாகம்‌ சிறப்பாக பணியாற்றிட இன்றைய 74-வது சுதந்திர தினவிழாவில்‌ உறுதி ஏற்றுக்‌ கொள்வோம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.



இதனைத்‌ தொடர்ந்து, ரத்தினம்‌ கல்வி குழுமத்தின்‌ சார்பில்‌ கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருவதை பாராட்டி கோவிட்‌ வாரியர்‌ என்ற விருதினை வழங்கி சிறப்பித்தனர்‌.

பின்னர்‌, கோவை மாநகராட்சியில்‌ அப்பழுக்கின்றி 25 ஆண்டுகள்‌ பணி முடித்த அலுவலா்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ 22 பேருக்கு பாராட்டு வெகுமதியாக தலா ரூ.2,000 வெகுமதி மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ வழங்கினார். 

இவ்விழாவில்‌ மாநகராட்சிப்‌ பொறியாளர்‌ லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ தி.ரா.ரவி, செந்தில்குமார் ரத்தினம்‌, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, மகேஷ்கனகராஜ்‌, முருகன்‌, நகரமைப்பு அலுவலர்‌ எஸ்‌.ரவிச்சந்திரன்‌, மாநகர

நகர்நல அலுவலர்‌ ராஜா, மாநகர கல்வி அலுவலர்‌ வள்ளியம்மாள்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) அண்ணாதுரை, உதவி ஆணையர்‌ (கணக்கு) சரவணன்‌, உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) மோகனசுந்தரி, நிர்வாக பொறியாளா்கள்‌ பார்வதி, சசிப்பிரியா, உதவி நிர்வாக‌ பொறியாளர்‌ கே.கருப்பசாமி, மண்டல சுகாதார ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ தூய்மைப்‌ பணியாளா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...