கொரோனா தொற்று தாக்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இருக்கும் - இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு செயலாளர்

கோவை: கொரோனா தொற்று தாக்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.

கோவை: கொரோனா தொற்று தாக்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.

கோவையில் புரூக் பாண்ட் சாலையில் அமைந்துள்ள இந்திய மருத்துவர் சங்க அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு செயலாளர் டாக்டர் ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், உலகளவில் பல லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் எனவும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 58 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் இதில் 32 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அவர், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கான உரிமத்தை அரசு வழங்கிட வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர், கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கொரோனா சிகிச்சைக்காக இலட்சக் கணக்கில் தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நோய்த்தொற்று மிகவும் அபாயகரமானது எனவும் அதற்கு சிகிச்சை அளிக்ககூடிய மருத்துவர்கள் முதல் வரிசையில் களப்பணியாளர்களாக போராடி வருகின்றனர் எனவும் முள் மீது நடப்பது போன்று உள்ளது என்றவர், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

சிகிச்சை பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்தினர் இதை கணக்கில் கொண்டு தான் பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பணம் செலவாகிறது எனவும் இந்த தொகையை வசூலிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அரசு ஒரு நாளைக்கு 7500 ரூபாய் வசூலிக்க அனுமதி அளித்தது உள்ளதாகவும் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.



கொரோனா நோய்த்தொற்று அடுத்த இரண்டு வருடங்கள் நம்மை விட்டு போகாது எனவும் தனிமனித கட்டுப்பாடுகள் தான் மிக முக்கியம் எனவும் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தனிமனித இடைவெளி போன்ற அரசின் கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அப்போது தான் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று கூறினார்.

மேலும், வீட்டுக்கு வீடு பல்ஸ் ஆக்சி மீட்டர் வாங்கி வைத்து கொள்ளலாம் எனவும் இல்லாவிட்டால் உதவும் எண்ணம் கொண்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் இந்த கருவியை வாங்கி கொடுக்க வேண்டுகோள் வைக்கலாம் என தெரிவித்தார்.

அரசின் ஊரடங்கு உத்தரவும், இ-பாஸ் முறையும் கொரொனாவை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவியதாகவும் தற்போது மீண்டும் ஊரடங்கு இ-பாஸ் முறை எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, தனியார் மருத்துவமனைக்கு கிடைக்க கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாகவும் அதை சரிசெய்ய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக கூறிய அவர், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்து சேமிப்பு இடங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...