இ-பாஸ் முறையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஓட்டுநர்களுக்கு, உதவி தொகை வழங்க சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூர் வட்டாசியர் அலுவலகத்தில் சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூர் வட்டாசியர் அலுவலகத்தில் சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் முறையால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல கட்டாயம் பாஸ் பெற வேண்டும். இதனால், மக்கள் வெளியில் செல்வது பெரிதும் குறைந்துள்ளதால், டாக்சி, மேக்சி வேன், ஷேர் ஆட்டோ, டெம்ப்போ, தனியார் பஸ் ஆகியவற்றின் ஓட்டுநர்கள், வருமானம் இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பிரச்னையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், நடைமுறையில் உள்ள இ பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஓட்டுநர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 உதவித் தொகையாக வழங்க வேண்டும் என, சிஐடியு மோட்டார் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை அமலில் உள்ளதால், மாவட்டத்திற்குள் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வேறு மாவட்டத்திற்கு, வாடகை கார்கள் மற்றும் வேன்களில் சவாரிக்கு மக்கள் வந்தாலும், எங்களால் இ-பாஸ் இல்லாமல் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றோம், என்று தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

ஆகவே, இந்த இ பாஸ் முறையினை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, வருமானமின்றி தவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.7500 இழப்பீடாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதனையடுத்து, திருப்பூர் வட்டாசியரிடம் அவர்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...