கோவை: பொள்ளாச்சியில் தென்னை மற்றும் வாழைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சியில் தென்னை மற்றும் வாழைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள புரவிபாளையம், வடக்கிபாளையம், சேர்வைக்காரன்பாளையம், சூலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. 90 நாட்கள், பயிரான நிலக்கடலையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டனர்.
அறுவடை காலத்தில் பெய்த கன மழையால், நிலக்கடலை பயிர்கள் அழுகும் அபாயம் - விவசாயிகள் வேதனை.
ஆனால், இந்த முறை உரிய நேரத்தில் பருவ மழை பெய்யாததாலும், காலம் தாழ்த்தி அறுவடை காலத்தில் பெய்த கன மழையால், நிலக்கடலை பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

விலை சரிவு
சராசரியாக விளைச்சல் காலங்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் நிலக்கடலை அறுவடை செய்யப்படும், மேலும் நிலக்கடலைக்கு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வந்தது, என்று நினைவு கூர்ந்தனர்.
சரியான விளைச்சல் இல்லாததால், தற்போது ஏக்கருக்கு 500 கிலோ வரை மட்டுமே நிலக்கடலை அறுவடை செய்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும், அறுவடை செய்யப்பட்ட கடலைகள் அளவில் சிறியதாக இருப்பதால், கிலோ ரூ. 20 முதல் ரூ.25 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது, என்றனர்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்த வருமானம், தற்போது மழை காரணமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் உழவுப் பணி, அறுவடை, ஆட்கூலி, விதை என செலவுகளை கணகிட்டு பார்த்தால், பெரிதாக லாபம் ஏதுமில்லை, என நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.