அழிந்து வரும் இனமான நீலகிரி மார்ட்டின் பற்றி ஆய்வு செய்து, அவற்றை பாதுகாக்க வேண்டும் - வன ஆர்வலர்கள் கோரிக்கை!

நீலகிரி: அரிதின் அரிதாக தென்பட்ட அழிந்து வரும் இனமான நீலகிரி மார்ட்டின் பற்றி ஆய்வுகள் செய்து, அவற்றை பாதுகாக்கக் கோரி வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: அரிதின் அரிதாக தென்பட்ட அழிந்து வரும் இனமான நீலகிரி மார்ட்டின் பற்றி ஆய்வுகள் செய்து, அவற்றை பாதுகாக்கக் கோரி வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. ஒரு சில உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்திற்கு தெரிந்தவை. தெரிந்து கொள்ளாதவை இன்னமும் நிறைய வாழ்கிறது.

அந்த வகையில் அழிவின் விளிம்பில் சிவப்பு நிற பட்டியலில் உள்ள நீலகிரி மார்ட்டின் சில நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்டத்தில் தென்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் இருந்ததால் முதலில் கருஞ்சிறுத்தை என்று தான் நம்பினர்.

ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் கருஞ்சிறுத்தை தென்பட்டது. அதே போல் சிறிய விலங்காகவும், பூனை போன்ற அமைப்பும் காணப்பட்டது. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களில் கூட பேசும் பொருளாக மாறியது.

இதையடுத்து, ஆய்வாளர்களின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு நீலகிரி மார்ட்டின் என்று உறுதி செய்யப்பட்டது. மார்ட்டின் என்பது அழிந்து வரும் வகையை சேர்ந்த விலங்காகும். இவை இந்தியாவில் வேறு எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டையோட்டின் அமைப்பு சிறிது மாறுபட்டு இருக்கும். வெளிப்புற தொண்டையின் அடிப்புறத்தில் அடர்ந்த மஞ்சள் நிறமாக காணப்படுவதால் மஞ்சள் நிற மார்ட்டின் என்று கூட இதனை அழைப்பர். வால் தவிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும், வால் 40 முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். வளர்ந்த மார்ட்டின் எடை 2.1 ஆக இருக்கும்.

மேலும், இது பகலில் வேட்டையாடும் பகலாடி விலங்கு. மரத்தை வாழிடமாகக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது தரைக்கு வருகிறது. சிறு சிறு பாலூட்டிகள், பறவைகள், சிக்காடா பூச்சி முதலானவற்றை உணவாக கொள்கிறது.

இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், பரந்து விரிந்த நீலகிரி வனப்பகுதிகளின் அருகில் உள்ள தேயிலை எஸ்டேட்களுக்கு அவ்வப்போது வருவதாக தெரிவித்தார்.

அழிந்து வரும் இனமான நீலகிரி மார்ட்டின் பற்றி ஆய்வுகள் செய்து அறிக்கைகள் வெளியிடுமாறும், அவற்றை பாதுகாக்கக் கோரியும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...