மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பருவமழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் - பாதிப்புகளுக்கு முன் சீரமைக்க கோரிக்கை!

கோவை: மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பருவமழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பருவமழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலைப்பாதையில் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் ஆங்காங்கே வேரோடு பெயர்ந்துள்ளது.

மேலும், மலையின் மேற்பகுதியில் இருந்து நீர் வழித்தடங்கள் வழியே பாறைகளும் உருண்டு வருவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் முன் மண் அரிப்பு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் வழியே தான் கடந்து செல்ல வேண்டும், குறிப்பாக இதில் அதிகப்படியான சாலை பயன்பாடு என்பது குன்னூர் சாலை வழியே தான் அதிகம்.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையானது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், குன்னூர், அவலாஞ்சி என அனைத்து பகுதிகளிலும் நல்ல மழையை தருவதால் நீலகிரியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு, அதனை சரிசெய்யும் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நீலகிரி மக்களை கோவையுடன் இணைக்கும் முக்கிய சாலையான குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் பருவமழை காணமாக மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழும் அபாயத்தில் உள்ளது.



தண்ணீர் வரத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு மரங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதுடன் மலைப்பகுதியில் இருந்து தாழ்வை நோக்கி ஓடும் நீர் வழித்தடங்களில் பெரிய பெரிய பாறைகளும் அங்காங்கே உருண்டு வருவதால் சாலை போக்குவரத்துக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.



ஆகவே, சாலை ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் விதமாக உள்ள இடங்களை கண்டறிந்து அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...