வால்பாறையில் காட்டுயானை புற்று கோவிலை துதிக்கையால் தொட்டு வணங்குவதாக கூறும் பொதுமக்கள்; வைரலாகும் வீடியோ

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள புற்று கோவிலை ஒரு காட்டு யானை துதிக்கையால் தொட்டு வணங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நிகழ்வு சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வலயதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள புற்று கோவிலை ஒரு காட்டு யானை துதிக்கையால் தொட்டு வணங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நிகழ்வு சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வலயதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 



வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வனத்தில் உள்ள விலங்குகள் காட்டைவிட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. 

இந்த நிலையில், வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான வாட்டர் பால் எஸ்டேட் பகுதியில் நாக கன்னியம்மன் கோவிலில் உள்ள புற்று மற்றும் வேலில் தனது தும்பிக்கையால் தொட்டு மூன்று முறை வணங்குவது போன்று செய்துவிட்டு, மீண்டும் தேயிலைத் தோட்ட வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.



இதை அவ்வழியே சென்ற தொழிலாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த விடியோவை மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...