மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!

கோவை: மேட்டுப்பாளையம், ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம், ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.



கோவை மாவட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் அவர்களின் உத்தரவு படியும், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அவர்களின் அறிவுறுத்தலின் படி மேட்டுப் பாளையம் வனச்சரகத்தில் உள்ள யானைகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ட்ரோன் மூலம் வனத்திற்குள் இருக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் நடமாட்டம், ஆரோக்கிய நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், நோய்வாய்ப்பட்ட யானைகள் ஏதும் இருக்குமாயின் அவற்றை முன்கூட்டியே கண்காணிக்க இயலும் என்றார்.



மேலும், யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப அப்பகுதிகளுக்கு களப்பணியாளர்களை அனுப்பி, அந்த யானைகள் வனத்தில் இருந்து வெளியே வராமல் வனத்திற்குள்ளேயே திருப்பி அனுப்ப இயலுமா என்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.

அதிகளவில் யானைகள் உயிரிழப்பு நடந்து வரும் சிறுமுகை பகுதியை ட்ரோன் மூலம் கவனிப்பது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...