தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல் கூட தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை உள்ளது - கனகசபாபதி, பாஜக மாநில துணைத்தலைவர்

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே கூட்டல், கழித்தல் தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை உள்ளது என்று,  பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பொள்ளாச்சியில் பேட்டி அளித்தார்.








கோவை: தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே கூட்டல், கழித்தல் தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை உள்ளது என்று,பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பொள்ளாச்சியில் பேட்டி அளித்தார். 

பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். 



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்: 

மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையில் தொழில்கல்வியை அவசியமாக்கபட்டிருப்பதாகவும், ஆறாம் வகுப்பிலிருந்து 

பாடப் படிப்புகளுடன் சேர்த்து ஒருங்கிணைத்து தொழிற்கல்வியும் கற்று கொடுக்கப்படும். 

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வியில் எந்தவிதமான திணிப்பும் இல்லை.முதல் மொழியாக தாய்மொழி, இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக என்ன பாடம் கற்க வேண்டும் என்று அந்த மாணவர்களே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.



புதிய கல்விக் கொள்கையில்மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதவும், எண்ணவும் தெரியும் அளவிற்கு மாணவர்களின் கல்வி திறனை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், இன்றைய நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் கூட தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை தமிழ் நாட்டுக் கல்வியை சிரமப்படுத்தி இருக்கிறது என்று சாடினார். 

மும்மொழி கல்விக் கொள்கைக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்ததாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமியும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஆராய குழு அமைத்து இருப்பதாக பதிலளித்தார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை தொடர்ந்து, மற்றுக்கட்சியை சேர்ந்த பலர், மாநில துணை தலைவர் கனகசபாபதி முன்னிலையில் பாஜக,வில் இணைந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...