தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே கூட்டல், கழித்தல் தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை உள்ளது என்று, பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பொள்ளாச்சியில் பேட்டி அளித்தார்.
கோவை: தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே கூட்டல், கழித்தல் தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை உள்ளது என்று,பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பொள்ளாச்சியில் பேட்டி அளித்தார்.
பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையில் தொழில்கல்வியை அவசியமாக்கபட்டிருப்பதாகவும், ஆறாம் வகுப்பிலிருந்து
பாடப் படிப்புகளுடன் சேர்த்து ஒருங்கிணைத்து தொழிற்கல்வியும் கற்று கொடுக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வியில் எந்தவிதமான திணிப்பும் இல்லை.முதல் மொழியாக தாய்மொழி, இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக என்ன பாடம் கற்க வேண்டும் என்று அந்த மாணவர்களே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையில்மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதவும், எண்ணவும் தெரியும் அளவிற்கு மாணவர்களின் கல்வி திறனை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், இன்றைய நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் கூட தெரியாத அளவிற்கு சமச்சீர் கல்வி முறை தமிழ் நாட்டுக் கல்வியை சிரமப்படுத்தி இருக்கிறது என்று சாடினார்.
மும்மொழி கல்விக் கொள்கைக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்ததாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமியும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஆராய குழு அமைத்து இருப்பதாக பதிலளித்தார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை தொடர்ந்து, மற்றுக்கட்சியை சேர்ந்த பலர், மாநில துணை தலைவர் கனகசபாபதி முன்னிலையில் பாஜக,வில் இணைந்தனர்.