திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர்பலி எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பதால், பணத்தில் மட்டுமல்லாமல் பிணத்திலும் தமிழக அரசு ஊழல் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், கடந்த இரண்டு தினங்களாக மாநில செயலாளர் முத்தரசன் காணொலிக் காட்சி வாயிலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வந்தார்.
அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் , கொரோனா களப் பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அறிவித்துவிட்டு, அறிவிப்பானையில் ரூபாய் 25 லட்சம் என வெளியிட்டுள்ளது அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போகும் எனவும் உடனடியாக அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இ-பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதால், அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும்
பொதுப் போக்குவரத்தை தளர்வுகளுடன் இயக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில், கட்சி அலுவலகங்கள் மீதும் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகாரளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர் பதிவிட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய கல்விக்கொள்கை குறித்து எந்தவித கருத்தும் கேட்காமல், நாடாளுமன்றத்தில் விவாதமும் செய்யாமல், அமல்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, பல சட்டங்களை மத்தியரசு அவசரமாக விவாதமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
எனவே, அவசரத்தில் செயல்முறைபடுத்தப்பட்ட சட்டங்கள் திரும்ப பெற வேண்டும், என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.