கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் 8 அடி நீளமான மலை பாம்பினை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமான மலை பாம்பினை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமான மலை பாம்பினை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் ஆயிரகணக்கான ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதன் மிக அருகேயே தேனாடு வனப்பகுதியும் உள்ளது.

இந்நிலையில், இன்று இப்பகுதியில் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று எஸ்டேட் பகுதியில் இருப்பதாக தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனவர்கள், தேயிலை தோட்டத்தில் படுத்துக் கிடந்த மலைப்பாம்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை அருகிலுள்ள தேனாடு காப்பு வனச்சரகத்தில் கொண்டு விட்டனர்.

இது குறித்து, வன அதிகாரிகள் கூறும்போது, மலைப்பாம்பு ஏதோ உணவினை விழுங்கி இருப்பதால் நகரமுடியாமல் இருந்ததாகவும், சுமார் எட்டு அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து காப்புக் காட்டில் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...