திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர்: திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள கூத்தம்பாளையம் பிரிவு பாலாஜி நகரில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது.



இன்று காலை இரும்பு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



இந்த தீ விபத்தில் நேற்றைய தினம் வியாபாரம் முடித்து கல்லாப் பெட்டியில் வைத்துச் சென்ற ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்கசிவு காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தீ விபத்து நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...