கோவை போளுவாம்பட்டி வனசரகத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை பலி..!

போளுவாம்பட்டி வனசரகம் சாடிவயல் அடுத்த போராத்தி கிராமம் அருகே  உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை இன்று சிகிச்சை பலனின்றி பலி.








கோவை: போளுவாம்பட்டி வனசரகம் சாடிவயல் அடுத்த போராத்தி கிராமம் அருகேஉடல் நலம் பாதிக்கப்பட்ட யானை இன்று சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் வனத்துறை மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 12 வயது மிதக்கதக்க அந்த பெண் யானை இன்று காலை பரிதாபமாக உயிரிந்தது. 

கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு அந்த மெலிந்து, சோர்வுடன் காணப்பட்ட யானைக்கு 53 பாட்டில் குளுக்கோஸ், தேவையான ஆண்டிபயாட்டிக் மற்றும் சத்து மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருந்தபோதும், யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் யானை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. 

இந்நிலையில் இன்று யானை சிகிச்சை பலனின்றி பலியானது.

கோவையில் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு யானைகள் இறந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கல்லீரல் தொற்று, நீர்சத்து குறைவு அதனை தொடர்ந்து உணவு அருந்த முடியாத நிலை போன்றவற்றால் உயிரிழந்து வருகிறது எனவும் விளை நிலங்களில் இரசாயன உரங்கள் தெளிகப்பட்ட பயிர்களை உட்கொள்வதால், இது போன்ற உடல் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...