போளுவாம்பட்டி வனசரகம் சாடிவயல் அடுத்த போராத்தி கிராமம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை இன்று சிகிச்சை பலனின்றி பலி.
கோவை: போளுவாம்பட்டி வனசரகம் சாடிவயல் அடுத்த போராத்தி கிராமம் அருகேஉடல் நலம் பாதிக்கப்பட்ட யானை இன்று சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் வனத்துறை மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 12 வயது மிதக்கதக்க அந்த பெண் யானை இன்று காலை பரிதாபமாக உயிரிந்தது.
கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு அந்த மெலிந்து, சோர்வுடன் காணப்பட்ட யானைக்கு 53 பாட்டில் குளுக்கோஸ், தேவையான ஆண்டிபயாட்டிக் மற்றும் சத்து மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருந்தபோதும், யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் யானை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில் இன்று யானை சிகிச்சை பலனின்றி பலியானது.
கோவையில் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு யானைகள் இறந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கல்லீரல் தொற்று, நீர்சத்து குறைவு அதனை தொடர்ந்து உணவு அருந்த முடியாத நிலை போன்றவற்றால் உயிரிழந்து வருகிறது எனவும் விளை நிலங்களில் இரசாயன உரங்கள் தெளிகப்பட்ட பயிர்களை உட்கொள்வதால், இது போன்ற உடல் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.