போத்தனூர் ரயில்வே உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவை: போத்தனூர் ரயில்வே உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தலைமை காவலருக்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை, தொடர்ந்து
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இதனை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர், தலைமை காவலர், காவலர் மூன்று பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக வேறு இடத்தில் சில நாட்கள் செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து காவல்நிலையம் மீண்டும் செயல்பட துவங்கிய நிலையில், அங்கு ரயில்வே காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது காவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் மதுக்கரை, போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.