போத்தனூர் ரயில்வே உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று

போத்தனூர் ரயில்வே உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவை: போத்தனூர் ரயில்வே உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் தலைமை காவலருக்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை, தொடர்ந்து 

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 

இதனை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர், தலைமை காவலர், காவலர் மூன்று பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக வேறு இடத்தில் சில நாட்கள் செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து காவல்நிலையம் மீண்டும் செயல்பட துவங்கிய நிலையில், அங்கு ரயில்வே காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது காவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் மதுக்கரை, போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு பின் பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...