தேக்கத்தில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை!

திருப்பூர்: உற்பத்தி செய்யப்பட்டு தேக்கத்தில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை-திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.

திருப்பூர்: உற்பத்தி செய்யப்பட்டு தேக்கத்தில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை-திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.



கோவை, திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தந்தை பெரியார் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு, நெகமம் காட்டன், கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.



இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை. இதனால் திருப்பூர், கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.

இதன் காரணமாக கைத்தறி சங்கங்கள் நலிவடைந்து வருவதுடன், சுமார் 70 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தள்ளுபடி மானிய தொகையை அரசு வழங்கி வருகிறது. இதை தமிழகம் முழுவதும் ஒரே தவணையாக ரூ.165 கோடியை வழங்கினால் சுமார் 70 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் தொடர் வேலை வாய்ப்பு பெற்று நன்மையடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மோசமான வியாபாரம் காரணமாக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக பெற்றுள்ள கடன் தொகைக்கான வட்டியை செப்டம்பர் மாதம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...