கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த நான்கு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கொரோனா தொற்றினால் கடந்த 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் இன்று அதிகாலை உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல, உக்கடம் பகுதியை சேர்ந்த முதியவரும் கொரோனா தொற்றினால் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 89 வயது முதியவரும் தொற்றினால் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அதேபோல, கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.

நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை நான்கு முதியவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...