கிணத்துக்கடவில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கொள்ளை..!

கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் கொரோனா நோயாளிகள் மற்றும் மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் கொரோனா நோயாளிகள் மற்றும் மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இப்படி தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் வீடுகள் இரும்பு தகரங்கள் கொண்டு அடைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த தொற்று பாதிப்புள்ள வீடு அருகே செல்லவே அச்சம் அடைகின்றனர்.

அதேபோல, கொள்ளையர்களும் கொரோனா தொற்றின் அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி (containment zone) பகுதிகளில் தங்கள் கைவரிசையை காட்ட தயங்கினர்.

கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோபி (41). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த மாதம் 24ம் தேதி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று தங்க மோதிரம், காதணி உட்பட 3 பவுன் நகை மற்றும், வீட்டில் இருந்த எல்.சி.டி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க அச்சம் அடைந்து வந்த சூழலில் தற்போது துணிகரமாக கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களின் வீடுகளுக்கும், உடமைக்கும் காவல்துறை பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...