வால்பாறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நிவாரண உதவிகளை வழங்கினார் எம்எல்ஏ கஸ்தூரி வாசு!

கோவை: வால்பாறையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் எம்எல்ஏ கஸ்தூரி வாசு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கோவை: வால்பாறையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் எம்எல்ஏ கஸ்தூரி வாசு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அந்த பெண் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவர் வசித்து வந்த சோலையார் எஸ்டேட் மூன்றாம் பிரிவில் உள்ள இரண்டு லைன்களில் 13 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.



இந்த நிலையில், இன்று வால்பாறை வந்த சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு சோலையார் எஸ்டேட்டிற்கு சென்று தனிமை படுத்தப்பட்டுள்ள 13 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வால்பாறை வி அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், வாசு பொன் கணேஷ், சலாவுதீன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...