கோவை: தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ள நிலையில், விநாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்குத் தென்மேற்கு பருவமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு பத்தாயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால் விரைவில் அணை நிரம்ப உள்ளது.
கேரளா காடுகள் மற்றும் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு, அட்டப்பாடி, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது பெய்து வருகிறது, இதன் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து 1000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக உயர்ந்தது
மேலும் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போதைய நீர்மட்டம் 97 அடியாக உள்ளது.

இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.