திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் சேதமடைந்து பல்லடம் சாலையில் சரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செங்கிஸ்கான்(54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது செல்போன் கோபுரம் சரிந்ததில் காரும் சேதம் அடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், செங்கிஸ்கான் உடலைக் கைப்பற்றி சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இரவு நேரத்தில் செல்போன் கோபுரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக சாலையில் போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பூரில் செல்போன் டவர்கள் பராமரிப்பின்றி முறிந்து விழுவது தொடர்கதையாகி வருவதால் செல்போன் டவர்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.