பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி சார் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு!

கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி சார் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை: பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி சார் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர்ப்புறப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த நான்கு வருடங்களாக 110 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. மேலும், 90 கோடி கூடுதலாக பெற்று ரூ.180 கோடி செலவில் பணிகள் நடந்து வந்தாலும் பொள்ளாச்சி நகர சாலைகள் எல்லாம் பாதாள சாக்கடை திட்ட குழிகள் மூடாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.



இந்த நிலையில், பணிகளை விரைந்து முடிக்க கோரி நகராட்சி ஆணையாளர் மற்றும் சார் ஆட்சியாளர் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, பொள்ளாச்சி கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ள சூழ்நிலையில் பல இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் ராகவேந்திரா மண்டபம் ரோடு, மார்க்கெட் ரோடு, ரயில் நிலையம் செல்லும் ரோடு, மாட்டு சந்தை முன்பு உள்ள ரோடு, வெங்கட்ரமணர் வீதி, நியூ ஸ்கீம் ரோடு என பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.



மேலும், பாதாள சாக்கடை குழிகள் தோண்டப்படும் போது குடிநீர் குழாய் உடைக்கப்படுகிறது.



சரி செய்யாமல் மூடிவிட்டுச் சென்றுவிடுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இத்திட்டம் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி திட்டமாக உள்ளது எனவும் கடந்த நான்கு வருடங்களாக பொள்ளாச்சி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாக சார் ஆட்சியரிடம் மனு அளித்ததாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, நகரக் கழகச் செயலாளர் டாக்டர் வரதராஜன், அமுதபாரதி, கார்த்திகேயன், பெருமாள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...