திருப்பூரில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறியோடு பரிசோதனைக்கு வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்கள் உடலை தனியாக வைப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.



மேலும், நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் மற்றும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும், ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...