விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க கூடிய சட்ட திருத்தங்களை நிறைவேற்ற கூடாது - தலையில் முண்டாசு கட்டி கோவை ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

கோவை: கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் முண்டாசு கட்டி நூதன முறையில் விவசாயிகள் மனு அளித்தனர்.


கோவை: தமிழக கூட்டுறவு சங்கங்களின் நகர்புற வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் அது மாநில அரசின் நிதி ஆதாரத்தை அபகரிக்கும் செயல் எனக்கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் முண்டாசு கட்டி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் மூலதனத்துடன் தனியாக துணை விதிகள் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் நகர்ப்புற வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்தும் என்ற அறிவிப்பு மாநில அரசின் நிதி ஆதாரத்தை அபகரிக்கும் அறிவிப்பு ஆகும்.

கூட்டுறவு வங்கிகளின் மூலதனம் அதன் உறுப்பினர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிப்பில் உருவான வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்தும் அறிவிப்பு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கு எதிரானதாகும்.

குறிப்பாக விவசாயிகளின் மூலதனம் மற்றும் பங்குகள், எவ்வித அறிவிப்பும் கருத்து கேட்புமின்றி மத்திய அரசால் அபகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

அதே போல், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டத்திருத்தம், வேளாண்மை விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசர சட்டம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் போன்ற சட்டங்களால் கார்ப்ரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை பதுக்கவும், அதிக விலைக்கு விற்கவும் வழிவகுக்கும். இதனை இந்தியாவில் நடைமுறைப்படுத்தக்கூடாது. இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...