கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி 18 அன்று வெறிச்சோடிய கோவை பேரூர் படித்துறை..!

கோவை: ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள ஆறுகளில், ஆடி 18 பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடும்படி அமைந்துள்ளது.

கோவை: ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள ஆறுகளில், ஆடி 18 பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடும்படி அமைந்துள்ளது.

மக்கள் ஆற்று படுகைகளில் தங்கள் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வழிபாடு செய்வது பழக்கம். மேலும், உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் ஆடிபட்டம் விதைப்பதுமுண்டு.

இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரையிலான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்திருந்தது.

இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. இந்த நாளில் ஆடிபெருக்கு விழா வந்திருப்பதால், கோவை பேரூர் படித்துறை பகுதியில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபடுவது, கோவில்களில் சிறப்பு பூஜை செய்வது என்று எவ்வித முறைகளும் பின்பிற்ற வாய்ப்பில்லாமல் போயுள்ளது, என மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.



ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோவை பேரூர் படித்துறை வெரிச்சோடி காணபட்டது. கோவில்கள் அனைத்தும் மூடபட்டிருப்பதால் சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...