கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் அளிக்கப்பட்டது.
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் என்பதால் இந்து மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுவதாக உள்ளது.
இப்படியிருக்க, தேவாரம் குறித்து சுந்தரவள்ளி என்பவர் யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால்,வ்சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக்தி சேனா என்ற இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனுவில் கடவுள் நம்பிக்கை உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் மட்டுமின்றி , உணர்ச்சிவசப்படும் இறை உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் பேசி வருவது புரிகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், காவல்துறையினர் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.