தேவாரம் பற்றி அவதூறாக பேசிய சுந்தரவல்லி மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்தி சேனா அமைப்பினர் புகார்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் அளிக்கப்பட்டது.

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் என்பதால் இந்து மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுவதாக உள்ளது.

இப்படியிருக்க, தேவாரம் குறித்து சுந்தரவள்ளி என்பவர் யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால்,வ்சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக்தி சேனா என்ற இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த மனுவில் கடவுள் நம்பிக்கை உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் மட்டுமின்றி , உணர்ச்சிவசப்படும் இறை உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் பேசி வருவது புரிகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், காவல்துறையினர் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...