கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை நகரத்திற்கு உட்பட்ட கிரீன்கில் வளாகத்தில் அதிமுக தலைமையினால் புதிதாக அறிவிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க கழக மாவட்டம் மற்றும் நகர கழக புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் நன்றி மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது, நகர கழக துணை செயலாளர் பொன்.கணேஷ் அனைவரையும் வரவேற்றார். நகர கழக செயலாளர் M.மயில் கணேசன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் வால்பாறை V.அமீது அவர்கள் இருவரும் கூறியதாவது, நாம் அனைவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் கழக பணியாற்ற வேண்டும், உளி படாத கல் சிலையாகாது, நாம் ஒற்றுமை இல்லாமல் பணியாற்றினால் வெற்றி கிடைக்காது.
எனவே, நம் மாவட்ட செயலாளர் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆலோசனைகளை ஏற்று ஒற்றுமையுடன் கழகப் பணியாற்றி எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் வால்பாறை மேல் பகுதியில் சென்ற சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்று மீண்டும் 2021ல் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடர அயராது பாடுபட்டு வெற்றியைப் பெற வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து, மாவட்டம், நகரம் மற்றும் சார்பு அணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.