வால்பாறையில் அதிமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை நகரத்திற்கு உட்பட்ட கிரீன்கில் வளாகத்தில் அதிமுக தலைமையினால் புதிதாக அறிவிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க கழக மாவட்டம்‌ மற்றும் நகர கழக புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் நன்றி மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.



அப்போது, நகர கழக துணை செயலாளர் பொன்.கணேஷ் அனைவரையும் வரவேற்றார். நகர கழக செயலாளர் M.மயில் கணேசன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் வால்பாறை V.அமீது அவர்கள் இருவரும் கூறியதாவது, நாம் அனைவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் கழக பணியாற்ற வேண்டும், உளி படாத கல் சிலையாகாது, நாம் ஒற்றுமை இல்லாமல் பணியாற்றினால் வெற்றி கிடைக்காது.

எனவே, நம் மாவட்ட செயலாளர் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆலோசனைகளை ஏற்று ஒற்றுமையுடன் கழகப் பணியாற்றி எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் வால்பாறை மேல் பகுதியில் சென்ற சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்று மீண்டும் 2021ல் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடர அயராது பாடுபட்டு வெற்றியைப் பெற வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து, மாவட்டம், நகரம் மற்றும் சார்பு அணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...