கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தனிமனித இடைவெளி மீறல், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருத்தல் போன்றவைகளை கண்காணிக்க மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் உத்தரவின் பேரில் 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகளால் ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி இதுவரை 431 கடைகள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளால் இதுவரை 431 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில், அரசு அறிவித்துள்ளது கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.