திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக எழுந்த புகாரை அடுத்து மேற்கொண்ட சோதனையில் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த சிறார்கள் மீட்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் சிறார்களை பணியில் அமர்த்தியுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சைல்டு லைன் அலுவலர்கள், குழந்தை தொழிலாளர் மற்றும் சுகாதாரப்பிரிவினர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் பொது, அந்த நூற்பாலையில் 37 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்களை பணியில் அமர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிறார்களை மீட்ட அதிகாரிகள், அவர்களை பல்லடம், தண்ணீர் பந்தல் மற்றும் பெரியார் காலனி பகுதிகளில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்பு அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர், என அதிகாரிகள் தெரிவித்தனர்.