சென்னை: சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சிக்கும் கிஷோர் கே சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மாநிலத்தை ஆளும்கட்சியுடனும் மத்தியில் ஆளும் கட்சியுடனும் தனக்குத் தொடர்புகள் இருப்பதாக நம்பும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதில் கைதேர்ந்தவர் கிஷோர் கே சாமி. 'அரசியல் விமர்சகர் ' என தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் டிவிட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார். அதில், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் இழிவுபடுத்தி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் மீது மாநகர காவல் துறையிடம் ஏற்கனவே பலர் புகார் அளித்துள்ளனர். அவற்றின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிலர் உயர்நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்றே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்தனர்.
பின்னர் வேறு சில பத்திரிகையாளர்கள் அளித்த புகாரில் இந்த கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்தார். பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த கிஷோர் கே சாமி, மீண்டும் ஊடகத்தில் பணியாற்றும் பெண்களை கீழ்த்தரமாகப் பதிவிட்டு வருகிறார். இவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.