பெண் பத்திரிகையாளர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் கிஷோர் கே சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்

சென்னை: சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சிக்கும் கிஷோர் கே சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை: சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சிக்கும் கிஷோர் கே சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மாநிலத்தை ஆளும்கட்சியுடனும்‌ மத்தியில் ஆளும் கட்சியுடனும்‌ தனக்குத்‌ தொடர்புகள்‌ இருப்பதாக நம்பும்‌ வகையில்‌ பொய்‌ மூட்டைகளை அவிழ்த்து விடுவதில்‌ கைதேர்ந்தவர்‌ கிஷோர்‌ கே சாமி. 'அரசியல்‌ விமர்சகர்‌ ' என தன்னை அழைத்துக்கொள்ளும்‌ இவர்‌ டிவிட்டர்‌, முகநூல்‌ போன்ற சமூக ஊடகங்களில்‌ எழுதி வருகிறார்‌. அதில்‌, பெண்‌ பத்திரிகையாளர்களை மிகவும்‌ கீழ்த்தரமான வார்த்தைகளால்‌ இழிவுபடுத்தி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்‌.

இவர்‌ மீது மாநகர காவல்‌ துறையிடம்‌ ஏற்கனவே பலர்‌ புகார்‌ அளித்துள்ளனர்‌. அவற்றின்‌ மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்‌ சிலர் உயர்நீதிமன்றம்‌ வரை சென்று உத்தரவு பெற்றே, முதல்‌ தகவல்‌ அறிக்கை பதிவு செய்ய வைத்தனர்‌.

பின்னர் வேறு சில பத்திரிகையாளர்கள்‌ அளித்த புகாரில் இந்த கிஷோர்‌ கே சாமி கைது செய்யப்பட்டு, பிணையில்‌ வெளிவந்தார்‌. பின்னர்‌ சிறிது காலம்‌ அமைதியாக இருந்த கிஷோர்‌ கே சாமி, மீண்டும்‌ ஊடகத்தில்‌ பணியாற்றும்‌ பெண்களை கீழ்த்தரமாகப்‌ பதிவிட்டு வருகிறார். இவர் மீது பெண்‌ பத்திரிகையாளர்கள்‌ அளித்துள்ள புகார்களின் அடிப்படையில்‌, மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என சென்னை பத்திரிக்கையாளர்‌ சங்கம்‌ கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...