திருப்பூர்: திருப்பூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற பிரபு (29) என்பவரை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் வேலை செய்து வரும் பிரபு வீட்டு அருகில் உள்ள 14 வயது சிறுமியை, கடந்த 9 மாதங்களாக காதலிப்பதாக கூறி அச்சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், ஒரு கட்டத்தில் அச்சிறுமி வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததும், இரண்டு நாட்கள் முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூண்டி காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், பூண்டி காவல் நிலைய போலீசார் தருமபுரி சென்று அந்த சிறுமியை மீட்டும பிரபுவை கைது செய்து, திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் பிரவுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.